Thursday, 16 May 2013

புத்தகங்கள்

பள்ளி மேற்படிப்பின் நிறைவுக் காலகட்டம் வாழ்வின் முக்கியமான பருவம். ஒவ்வொரு மாணவரும் தங்களின் இலக்கைத் தீர்மானிப்பது இந்தப் பருவத்தில்தான். இலக்கு, பயணம், ஆர்வம் என தங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியில் அடி எடுத்து வைக்கும் வளர் இளம் பருவத்தினருக்கு வழிகாட்டும் துணையாக மலர்ந்திருக்கிறது விகடன் கல்வி மலர். திசை தெரியாது திகைத்து நிற்கும் மாணவமணிகளை வருங்கால வி.ஐ.பி&களாக வார்த்தெடுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு. பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், தொழில் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், பொறியியல் படிப்புகள் என பரந்துகிடக்கும் படிப்பு உலகில் உங்களுக்கான ஓர் இடமும் உள்ளது. அதனை எதன் அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம், படிப்பதற்கான கல்விக் கடன் பெறுவது எப்படி, மேற்படிப்புக்கான ஆலோசனைகளை எங்கு பெறுவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பட்டப் படிப்புகளுக்கான வாய்ப்புகளை அறிவது எப்படி என ஏராளமான விவரங்களை இந்த நூலில் மிகுந்த கவனத்தோடு பட்டியலிட்டு இருக்கிறோம். தொழில் துறை படிப்புகளின் இன்றைய நிலை என்ன, எந்தத் தொழில் செய்ய எந்தப் படிப்பைப் படிக்க வேண்டும், இதற்கான கால அவகாசம், செலவு எவ்வளவு என்கிற விவரங்களையும், பொறியியல் படிப்பில் உள்ள பல்வேறு புதிய படிப்புகளின் பட்டியலையும் விரிவாகச் சொல்லி இருக்கிறோம். கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் இன்றைய மாணவர்களுக்கு உள்ள ஆர்வம், ஜிழிறிஷிசி, ஹிறிஷிசி, ஜிஸிஙி, ழிணிஜி, ஷிணிஜி, ஜிணிஜி, ழிணிணிஜி போன்ற போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்கிற வழிகாட்டல் உள்ளிட்டவற்றை இந்தத் தொகுப்பு விளக்கமாகச் சொல்கிறது. அறிவிற்சிறந்த பெருமக்களால் மிகுந்த கவனத்தோடு தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல், வருங்காலச் சந்ததிகளின் வழிகாட்டியாக நிச்சயம் விளங்கும். வாழ்வின் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் மாணவமணிகள் தங்களின் இலக்கையும் எதிர்காலத்தையும் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள மனமார வாழ்த்துகிறது விகடன் பிரசுரம்!

http://books.vikatan.com/index.php?bid=2093

No comments:

Post a Comment